பொது செய்தி

இந்தியா

ரபேல் விவகாரம்: பார்லி.,யில் இன்று சி.ஏ.ஜி., அறிக்கை தாக்கல்

Updated : பிப் 12, 2019 | Added : பிப் 12, 2019 | கருத்துகள் (13)
Advertisement
ரபேல்,பார்லி.,சி.ஏ.ஜி., அறிக்கை,தாக்கல்

புதுடில்லி: ரபேல் போர் விமானங்கள் வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக, பார்லிமென்டில் இன்று(பிப்.,12) சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம், அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.

ஐரோப்பிய நாடான, பிரான்சில் உள்ள, 'டசால்ட்' நிறுவனத்திடம் இருந்து, அதிநவீன ரபேல் போர் விமானங்கள் வாங்க, மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. 'இதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலை அதிகம்; டசால்ட் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக, அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் டிபென்சை, இந்த ஒப்பந்தத்தில் சேர்த்தது தவறு' என, காங்., தலைவர், ராகுல் குற்றஞ்சாட்டி வருகிறார். இந்த விவகாரம், பார்லிமென்டில் கடும் அமளியை ஏற்படுத்தி வருகிறது.





இந்நிலையில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, பார்லி.,யில் இன்று, சி.ஏ.ஜி., அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக, தகவல்கள் கூறுகின்றன. தற்போதைய லோக்சபாவின், கடைசி கூட்டம், நாளை முடியவுள்ள நிலையில், இன்று, சி.ஏ.ஜி., அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suri - Chennai,இந்தியா
12-பிப்-201912:28:10 IST Report Abuse
Suri இந்த பேரம் நடந்த போது இருந்த பைனான்ஸ் செகரட்டரி இப்பொழுது CVC . அப்பொழுது அவர் செய்த வேலையை அவரே சரி என்று சொல்ல போகிறார். நம் நாட்டில் மட்டுமே இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்கும். அதை சரி என்று கூறுவதற்கும் ஒரு கூட்டம் இருக்கும்.
Rate this:
Share this comment
தலைவா - chennai,இந்தியா
12-பிப்-201913:33:24 IST Report Abuse
தலைவா அப்போ கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியா வரும் ...கீறீங்க....
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
12-பிப்-201910:03:43 IST Report Abuse
pattikkaattaan நம் நாட்டில் மகாபாரத காலத்திலேயே அதிநவீன போர்க்கருவிகள் இருந்ததாக படித்துள்ளோம் .. அதையெல்லாம் நாம் மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கலாமே... எதற்க்காக அந்நிய நாடுகளுக்கு அதுவும் வெள்ளைக்காரனுக்கு நம் காசை கொண்டுபோய் கொடுக்கவேண்டும் ?
Rate this:
Share this comment
12-பிப்-201911:10:39 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்காங்கிரஸ் இதுவரை வெளிநாட்டில் ஆயுதம் வாங்குவதையே செய்துவந்தது , அதற்கு காரணம் சுலபமாக பெரிய தொகைகளை ப்ரோக்கர்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். நாட்டின் முன்னேற்றத்தை பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. மோடிதான் அதற்கான முயற்சியாக மேக் இன் இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்....
Rate this:
Share this comment
தலைவா - chennai,இந்தியா
12-பிப்-201913:37:35 IST Report Abuse
தலைவா அதான் அண்ணாமலை அப்போ எதுக்கு ரபேல் ஒப்பந்தம் நம்ம நாட்டிலேயே நாகாஸ்திரம், பிரம்மாஸ்திரம் மாதிரி புஷ்பக விமானம் மாதிரி எதையாவது தயாரிக்கலாம்?? என்பதுதான் பட்டிகாட்டானின் கேள்வி....
Rate this:
Share this comment
CECIL KALLADAI - chennai,இந்தியா
12-பிப்-201914:04:42 IST Report Abuse
CECIL KALLADAIஇப்பொது ஏற்பாடு நடந்து கொண்டு இருக்கிறது. சில வருடங்கள் ஆகும்...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-பிப்-201907:45:32 IST Report Abuse
Srinivasan Kannaiya தேர்தல் வர வர எல்லாமே சூடு பறக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X