ரூ.622 கோடி!  30 ஆண்டுகளில் குத்தகை பாக்கி:தீர்ப்பு வந்தால் அதிரடி நிச்சயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.622 கோடி!  30 ஆண்டுகளில் குத்தகை பாக்கி:தீர்ப்பு வந்தால் அதிரடி நிச்சயம்

Added : பிப் 12, 2019
Advertisement

ஊட்டி:ஊட்டியில் வருவாய் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களில் குத்தகை பாக்கி, 622 கோடி ரூபாயை எட்டியுள்ளது.ஊட்டி நகரில் வருவாய் துறை கட்டுப்பாட்டில் ஏராளமான இடங்கள் கடந்த பல ஆண்டுகளாக குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அரசு, தனியார் நிர்வாகம் வருவாய் துறை இடத்தில் குத்தகைக்கு உள்ளனர். இதன் நிர்வாகிகள், வருவாய் துறை கணக்குப்படி, சொற்ப அளவு தொகையை மட்டும் பெயரளவுக்கு அவ்வப்போது கட்டி வருகின்றனர். அதன்படி, கடந்த, 30 ஆண்டு இடைவேளையில், பல கோடி ரூபாய் குத்தகை பாக்கி நிலுவையில் உள்ளது. அதன்படி, 'ஊட்டி நகரில் வருவாய் துறைக்கு சொந்தமான குதிரைபந்தய மைதானம், 600 கோடி ரூபாய்; அரசு போக்குவரத்து கழகம், 4 கோடி ரூபாய்; பாரதியார் வணிக வளாகம், 4 கோடி ரூபாய்; ஜிம்கானா கிளப், 14 கோடி ரூபாய்,' என, 622 கோடி ரூபாய் கடந்த பல ஆண்டுகளாக குத்தகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். கடந்த பல முறை குத்தகை பாக்கி செலுத்த கோரி, வருவாய் துறை சார்பில் 'நோட்டீஸ்' அனுப்பியும் அதற்கான தொகையை செலுத்தவில்லை. இதில், மெட்ராஸ் ரேஸ் கோர்ஸ் மற்றும் ஜிம்கானா கிளப் நிர்வாகம் இது சம்மந்தமாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.வசூல் சாத்தியமா!கடந்த, 2018 ம் ஆண்டு இறுதி கணக்குப்படி, அரசுக்கு வரவேண்டிய, 622 கோடி ரூபாய் நிலுவை தொகை வசூலாகும் பட்சத்தில், பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அரசு மேம்படுத்த முடியும். 'கடந்த பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வரும் வழக்கை மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு உதவியுடன் விரைந்து முடித்து, குத்தகை பாக்கி தொகைகளை வசூல் செய்ய வேண்டும்,' என, பல சமூக நல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.ஆனால், இந்த பெரும் தொகையை வசூல் செய்வதில் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாட்டில், வேகம் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனை ஊர்ஜிப்படுத்தும் விதத்தில், வழக்கை விரைந்து முடிக்கும் நோக்கில், வழக்கு விசாரணை, 15 நாட்களுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. வருவாய் துறை அதிகாரிகளும் வழக்குக்கு ஆஜராகி துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், '' வழக்கின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். தீர்ப்பு வந்ததும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X