மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்., பணியிடம் காலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்., பணியிடம் காலி

Added : பிப் 12, 2019
Advertisement

கூடலுார்:கூடலுார், தேவாலா அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கூடலுார், தேவாலா ஆகிய இடங்களில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. கூடலுார் சப் - டிவிஷனுக்கு உட்பட்ட கூடலுார், தேவர்சோலை, மசினகுடி, நியூஹோப் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் பெண்கள் கொடுக்கும் புகார்கள், கூடலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் எடுத்து கொள்ளப்படுகின்றன.தேவாலா சப் - டிவிஷனுக்கு உட்பட்ட தேவாலா, சேரம்பாடி, எருமாடு, நெலாகோட்டை, அம்பலமூலா போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பெண்கள் தொடர்பான புகார்கள், தேவாலா அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில் விசாரிக்கப்படுகின்றன.அதில், கூடலுாரில் மகளிர் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன. தேவாலா இன்ஸ்பெக்டர், கூடலுார் இன்ஸ்பெக்டர் பணியையும் கூடுத லாக கவனித்து வந்தார். அவர் சமீபத்தில் பணி ஓய்வு பெற்று சென்று விட்டார். தற்போது, இரு இடங்களிலும் மகளிர் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது. இங்கு வரும் புகார்கள், அருகேயுள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றி வரும், போலீஸ் அதிகாரிகள் அல்லது ஊட்டியிலிருந்து மகளிர் இன்ஸ்பெக்டர் வந்து விசாரிக்க வேண்டியுள்ளது.இதனால், புகார்களை விரைவாக விரசாணை செய்து, தீர்வு காண்பதில் போலீசாருக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'பெண்கள், குடும்பங்களில் சந்திக்கும் பல்வேறு பிரச்னைளுக்கு தீர்வு காண, மகளிர் போலீஸ் ஸ்டேஷனை தேடி வருகின்றனர். அங்கு பெண் அதிகாரிகள் இல்லாததால் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் தாமதம் ஏற்படுகிறது. விசாரணைக்கு வரும், ஆண் போலீஸ் அதிகாரிகளிடம் பெண்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளை முழுமையாக தெரிவிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, கூடலுார், தேவாலா மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில் காலியாக உள்ள, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., பணியிடங்களை நிரப்ப வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X