ஏமாற்றும் மழை: காபி பூ பூப்பதில் தாமதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏமாற்றும் மழை: காபி பூ பூப்பதில் தாமதம்

Updated : பிப் 12, 2019 | Added : பிப் 12, 2019
Advertisement
 ஏமாற்றும் மழை: காபி பூ பூப்பதில் தாமதம்

கூடலுார்:கூடலுார், பகுதியில் மழை ஏமாற்றி வருவதால், காபி பூ பூப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.கூடலுார் பகுதியில், தேயிலை விவசாயத்தை அடுத்து, காபி விவசாயத்தில், பல விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு, அரபிக்கா, ரோபஸ்டா வகை காபி, 6,985 ஏக்க்ர் பரப்பளவில் விளைவிக்கப்படுகிறது. இதில், அரபிக்கா காபி செடிகளின் பரப்பளவு, 2400 ஏக்கர் ஆகும்.கடந்த, 2017ல் அரபிக்கா காபி, 3000 டன் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு காபி மொட்டு விட்ட நேரத்தில் கோடை மழையும், தொடர்ந்து பருவமழையும் பெய்தது. இதனால், காபி விளைச்சல், அமோகமாக இருந்தது.காபி அறுவடை முடிந்து, தற்போது ரோபஸ்டா காபி செடிகளில், பூ பூக்க மொட்டுகள் தயார் நிலையில் உள்ளன. பனிப்பொழிவு காரணமாக சில இடங்களில் மட்டும் காபி பூ பூத்துள்ளது.மழை இல்லாததால், பெரும்பாலான பகுதி களில் காபி பூ பூக்க வில்லை. இதனால், காபி விளைச்சல் பாதிக்கும் அபாயம் உள்ளது.கூடலுார் காபி வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'கடந்த ஆண்டு, சரியான நேரத்தில் மழை பெய்யாததால், 2017 ஆண்டை விட, கடந்த ஆண்டு, காபி உற்பத்தி அதிகமாக இருந்தது. தற்போது, ரோபஸ்டா காபி செடிகளில் மொட்டு உற்பத்தியாகி பூ பூக்க மழையை எதிர்பார்த்து காத்துள்ளனர். காபி பூ பூக்க, 25 மி.மீ., முதல் 40 மி.மீ., வரை மழை அவசியம். ஆனால், இதுவரை மழை பெய்யவில்லை. வரும், 10 நாட்களில் மழை பெய்தால் காபி பூக்கும். இல்லையெனில், மொட்டுகள் பூக்காமல் கருகும் ஆபத்து உள்ளது. இதனை தவிர்க்க மழை இல்லாத பகுதிகளில் 'ஸ்பிரிங்ளர்' மூலம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இல்லையெனில், காபி மகசூல் பாதிக்கும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X