பருவநிலை மாற்றம்: இமயமலைக்கு பெரும் அச்சுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பருவநிலை மாற்றம்: இமயமலைக்கு பெரும் அச்சுறுத்தல்

Added : பிப் 12, 2019 | கருத்துகள் (2)
Advertisement
பருவநிலை மாற்றம்: இமயமலைக்கு பெரும் அச்சுறுத்தல்

பருவ நிலை மாற்றத்தால் இந்து குஷ் மற்றும் இமயமலை பகுதிகளில் உள்ள பனிமலைகள் அழிவை சந்தித்து வருவதாக ஒருங்கிணைந்த மலை அபிவிருத்திக்கான சர்வதேச மையம் தெரிவித்து உள்ளது.

இப்பனிமலைகள் தான் ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் பூட்டான் சீனா இந்தியா மியான்மர் நேபாளம் மற்றும் பாகிஸ்தான் என எட்டு நாடுகளில் வசிக்கும் 250 மில்லியன் மக்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது.

இந்நிலையில் அதிகரித்து வரும் அதிகப்படியான கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற பருவநிலை மாற்றத்தால் இம்மலைகளில் உள்ள மூன்றில் இரு மடங்கு பனி மலைகள் காணாமல் போகக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்து உள்ளனர். இம்மலைகளை ஒட்டிய பிராந்தியங்களில் வாழும் மக்கள் ஏற்கனவே காற்று மாசு மற்றும் அதிகரிக்கும் மோசமான வானிலை நிகழ்வுகளால் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் பனி மலைகள் உருகுவதால் நதியையொட்டிய பகுதிகளில் வாழும் 1.65 பில்லியன் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவர்; விவசாய நிலங்கள் அழியும். உலகின் முக்கியமான 10 நதிகளுக்கு இப்பனிமலைகள் தான் ஆதாரமாக விளங்குகின்றன. கங்கை சிந்து மஞ்சள் மேகொங் ஐராவதி நதி உள்ளிட்ட ஆறுகள் பாதிக்கப்படும். மோசமான பருவநிலை மாற்றத்தால் இன்னும் ஒரு நுாற்றாண்டுக்குள் இப்பனிமலைகள் வெறும் பாறைகளை கொண்ட பிராந்திமாக மாறக்கூடம். இதனால் நுாறு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்வாதாரத்தை இழப்பர்.

கிழக்கு பாகிஸ்தான் மற்றும் வட மேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் இருந்து கங்கை பிராந்தியம் உட்பட கிழக்கு பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு வரையிலான பெரும் பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்த மோசமான காற்று காரணமாக பனி மலைகளின் நிலை மேலும் மோசமடையும். கருமை நிற கார்பன் மற்றும் துாசிகள் பனியின் மேல் படர்வதால் பனிக்கட்டிகள் உருகுவது அதிகரிக்கும்.

உலக வெப்பநிலையானது 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கும் எனில் 2100-ல் பனி மலைகளில் பாதி இருக்காது. உலகம் உடனடியாக சுதாரித்து வெப்பநிலை உயர்வை 1.5 செல்சியஸ் அளவுக்குள் குறைத்தாலும் கூட பனிமலைகளில் 36 சதவீதம் காணாமல் போய்விடும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
12-பிப்-201911:03:37 IST Report Abuse
நக்கீரன் மனிதனின் பேராசையால் இந்த உலகம் கொஞ்ச கொஞ்சமாக அழிவை சந்தித்து வருகிறது. நம் முன்னோர் நமக்கு விட்டு சென்ற அழகான உலகத்தை நாம் நமது குழந்தைகளுக்கு விட்டுச்செல்வது நமது கடமை. அதை செய்யாதவர்களை இந்த உலகத்தை விட்டு அப்புறப்படுத்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
pathy - muscat,ஓமன்
12-பிப்-201910:31:05 IST Report Abuse
pathy இந்த உலகம் இறைவன் நமக்கு குடுத்த ஒரு வரப்பிரசாதம்.ஆனால் மனிதர்களின் சுயநலத்தால் இயற்கை வளங்கள் சூறையாடப்படுகிறது. இனியும் நாம் திருந்தாவிட்டால் நமது அடுத்த தலைமுறை மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X