'கலர் டீ' விற்பனை அமோகம்: அதிகாரிகள் மவுனம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கலர் டீ' விற்பனை அமோகம்: அதிகாரிகள் மவுனம்

Added : பிப் 12, 2019
Advertisement

குன்னுார்:குன்னுார் மற்றும் பர்லியார் கடைகளில் சாயம் கலந்த 'கலர் டீ' விற்பனை அமோகமாக நடந்தும், உணவு கலப்பட துறை கண்டு கொள்ளாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.நீலகிரியின் நுழைவாயிலான பர்லியாரில், சாயம் 'கலர் டீ' விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இங்கு திறந்த வெளியிலேயே உணவு தின்பண்டங்களும் வைக்கப்பட்டுள்ளதால், வாகன புகை மற்றும் துாசிகளாலும், நோய் கிருமிகள் தாக்கும் அபாயம் உள்ளது.அரசு பஸ்களை கட்டாயம் இங்கு நிறுத்த வேண்டும் என்று போக்குவரத்து அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதால், இங்கு பொருட்களை வாங்கி உட்கொள்ள வேண்டிய நிர்பந்தம் பயணிகளுக்கு ஏற்படுகிறது. இங்கு, இரவு, 10:00 மணிக்கு மேல் அனைத்து கடைகளையும் அடைக்க போலீசார் உத்தரவிட்டாலும், ஒரே ஒரு கடை திறந்திருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.கலப்படம், காலாவதி, தரமற்ற உணவுகள் விற்பனை செய்வதை, தடுக்க வேண்டிய உணவு கலப்பட தடுப்பு அதிகாரிகள் 'கவனிப்பு' காரணமாக கண்டு கொள்வதில்லை.பந்தலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம் கூறுகையில், ''பர்லியார் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும், சாயம் கலந்த கலப்பட தேயிலை துாளை பயன்படுத்தி லாபம் பார்க்கும் செயலில் பெரும்பாலான டீக்கடைகள் ஈடுபடுகின்றன. இதுதொடர்பான புகார்களை உணவு கலப்பட துறைக்கு அனுப்பினால், புகார் தெரிவித்த நபர் குறித்த விபரங்களை, சம்மந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு, உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவிக்கும் அவல நிலை தொடர்கிறது. பர்லியார் உட்பட நகரில் உள்ள டீக்கடைகளில் எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை. ஊட்டி; குன்னுார் பகுதிகளில், சாயம் கலக்கும் தேயிலை ஏஜன்சிகள் உள்ள இடம், அதிகாரிகளுக்கு தெரிந்தும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X