போக்குவரத்து விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து விழிப்புணர்வு

Added : பிப் 12, 2019
Advertisement

கோத்தகிரி:கோத்தகிரி அரவேனு ஆல்பா ஜி.கே., மெட்ரிக் பள்ளியில், சாலை பாதுகாப்பு குறித்து, போக்குவரத்து போலீசார் சார்பில், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கோத்தகிரி எஸ்.ஐ., செவனன் மற்றும் சத்தியசீலன் ஆகியோர்,'விபத்து நடக்காமல் இருக்க, டிரைவர்கள் சாலை விதிகளை கடைப்பிடிக்கவேண்டும்; வாகன இயக்கத்தின்போது, குடிபோதையிலும், மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்; எதிரில் வரும் வாகனங்களுக்கு, தேவையான இடம் வழங்கவேண்டும்,' என, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும், ஆண்டுதோறும் போக்குவரத்து வாரத்தை கடைப்பிடிப்பதன் அவசியம், விபத்தில்லாத பயணத்தை உறுதிப்படுத்த, பொதுமக்களின் கடமை ஆகியவை குறித்தும் விளக்கினர். தொடர்ந்து, சாலை பாதுகாப்பு குறித்து, வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் சதாசிவம் உட்பட பலர் பங்கேற்றனர். முதல்வர் அமுதா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X