'கிசான் சம்மான் நிதி;' விவசாயிகளுக்கு அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கிசான் சம்மான் நிதி;' விவசாயிகளுக்கு அழைப்பு

Added : பிப் 12, 2019
Advertisement

ஊட்டி:விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை:சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்தும் பொருட்டு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டமானது விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் இடுபொருட்களை பெற்று நல்ல மகசூலை பெறும் நோக்கில் துவக்கப்பட்டுள்ளது.ஐந்து ஏக்கர் வரை விவசாய பூமி வைத்துள்ள விவசாய குடும்பத்திற்கு ஒரு ஆண்டிற்கு, 6,000 ரூபாய், மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், அனைத்து நிறுவனம் சார்ந்த நிலத்தின் உரிமையாளர்கள், ஒரு விவசாயி, விவசாய குடும்ப உறுப்பினர்கள் எவரேனும் அரசியலமைப்பு பதவிகளில் ஏற்கனவே இருந்திருந்தாலும், தற்போது இருந்தாலும் பயன் பெற இயலாது; விவசாயிகளின் குடும்பத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் நிலம் இருந்தாலும், ஒரே கிராமத்திலோ அல்லது வெவ்வேறு கிராமத்திலோ சொந்த நிலம் இருப்பின் அவர்களுடைய அனைத்து நிலங்களையும் கணக்கில் எடுக்கப்பட்டு, 5 ஏக்கர் வரை உள்ளவர்கள் மட்டும் இத்திட்டத்தில் பயன்பெற முடியும்.இத்திட்டத்திற்காக கலெக்டர் தலைமையில், வருவாய் துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்களை இணைத்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள் விவசாயிகளிடமிருந்து அவர்களுடைய தனிப்பட்ட விபரங்களான ஆதார் எண், வங்கி கணக்கு எண், நிலத்தின் சர்வே எண், குடும்ப அட்டை எண் போன்றவற்றை பெற்று பயனாளிகளை தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் விவசாயிகள் சுய உறுதி மொழி படிவம் கையொப்பமிட்டு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X