9 ஆண்டுகளாக திறக்கப்படாத தண்டுரை சமுதாய நலக்கூடம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

9 ஆண்டுகளாக திறக்கப்படாத தண்டுரை சமுதாய நலக்கூடம்

Added : பிப் 12, 2019
Advertisement
 9 ஆண்டுகளாக திறக்கப்படாத தண்டுரை சமுதாய நலக்கூடம்

ஆவடி:ஆவடியில், ஒன்பது ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள சமுதாய நலக்கூடம், எப்போது தான் திறக்கப்படும் என, பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.ஆவடி நகராட்சிக்குட்பட்ட பட்டாபிராம் அடுத்த தண்டுரையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன், 15 லட்சம் ரூபாய் செலவில், சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது.இந்த நலக்கூடத்திற்கு திறப்பு விழா நடத்தப்பட்ட நிலையில், இன்றுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை.கட்டடம் ஆண்டுக் கணக்கில் பயன்பாடில்லாமல் கிடப்பதால், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்த நலக்கூடம் பயன்பாட்டுக்கு வந்தால், ஒரு நாள் வாடகையாக, 7,500 ரூபாயில், பொதுமக்கள் நிகழ்ச்சிகளை நடத்த முடியும்.ஆனால், நலக்கூடம் பயன்பாட்டிற்கு வராததால், அப்பகுதியைச் சேர்ந்த ஏழை மக்கள், அதிகளவில் பணம் செலுத்தி, தனியார் மண்டபத்தில், சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.இந்த நலக்கூடத்தை திறக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.இந்நிலையில் நமது நாளிதழில், கடந்தாண்டு ஜூனில் இது குறித்த செய்தி வெளியானது.இதையடுத்து, அப்போதைய ஆவடி நகராட்சி ஆணையர், சமுதாய நலக்கூடத்தை சுத்தப்படுத்தி, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப் போவதாக உறுதியளித்தார்.அதன்பின், ஐந்து மாதங்கள் கடந்த பின்னும், இன்றுவரை சமுதாய நலக்கூடத்தை திறக்காமல், அதிகாரிகள், 'பம்மாத்து' காட்டி வருகின்றனர்.சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், சமுதாய நலக்கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X