சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள்

Added : பிப் 12, 2019
Advertisement

செங்குன்றம்:மாநகராட்சி, தேசிய நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்துள்ள கடைகளில், லஞ்சம் பெறும் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளால், போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.சென்னை, மாதவரம் மண்டலம், 22வது வார்டு, புழல், காவாங்கரையில், தனியார் மீன் மார்க்கெட் உள்ளது.அதை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலை மற்றும் கண்ணப்பசாமி நகர் பிரதான சாலை ஆகியவற்றை ஆக்கிரமித்து, காய்கறி, பழம், இறைச்சி விற்கும், 150க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.இதை புழல் போலீசார் மற்றும் மாநகராட்சி கண்டுகொள்வதில்லை. இதற்காக, கடைக்காரர்கள் சார்பில், லஞ்சம் கொடுக்கப்படுதாக கூறப்படுகிறது.இதை உறுதிப்படுத்தும் வகையில், போலீசார், ரோந்து வாகனத்தை நிறுத்தி, பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதனால், காவாங்கரை தேசிய நெடுஞ்சாலை சிக்னல் சந்திப்பில், கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.ஆக்கிரமிப்பு கடைகளால் குறுகிய சாலையில், அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட வாகனங்கள், அந்த பகுதியை எளிதில் கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், கண்ணப்பசாமி நகர் பகுதியில் வசிப்போரும், தங்கள் வீடுகளுக்கு செல்ல முடிவதில்லை.இது குறித்து, மாநகராட்சி மற்றும் புழல் போலீசாரிடம், பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு கடைகளின் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டே செல்கிறது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சுகாதாரமற்ற இறைச்சிசாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளில், சுகாதாரமற்ற பன்றி மற்றும் மாட்டிறைச்சி, மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து, சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தாலும், மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள், பெயரளவிற்கு கூட நடவடிக்கை எடுப்பதில்லை.எந்த பிரச்னையும் இல்லை! சாலை ஆக்கிரமிப்பு கடைகளுக்கு யார் அனுமதி வழங்கியது என விசாரித்தால், 'பகீர்' தகவல் வெளியாகிறது. 'மாநகராட்சி ஊழியர் மற்றும் புழல் போலீசாருக்கு, மாதந்தோறும் பெருந்தொகையை லஞ்சமாக கொடுக்கிறோம். அதனால், எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை' என, நடைபாதை வியாபாரிகள், 'கூலாக' சொல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X