பாலத்தில் விளக்கு வசதி தேவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாலத்தில் விளக்கு வசதி தேவை

Added : பிப் 12, 2019
Advertisement

செங்குன்றம்:பாலத்தில் விளக்கு வசதி இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை நீடிக்கிறது.சென்னை, செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் ஊராட்சி அருகே, பொத்துார் ஏரியின் உபரிநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயின் மீது, 3.85 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலம், கடந்த டிசம்பரில் திறக்கப்பட்டது.இந்த பாலம், பம்மதுகுளம், கோணிமேடு, லட்சுமிபுரம், எராங்குப்பம், சரத்கண்டிகை, பொத்துார் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கான பிரதான போக்குவரத்திற்கு உதவுகிறது.பாலம் மற்றும் அதை இணைக்கும், பொத்துார் - லட்சுமிபுரம் சாலையில் விளக்கு வசதி இல்லை. இதனால், இரவில் அந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், அச்சத்துடன் சென்று வர வேண்டிய நிலை உள்ளது.இரவில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், நிலை தடுமாறினால் புழல் ஏரி அல்லது பொத்துார் ஏரிக்குள் விழும் ஆபத்து உள்ளது.விபத்துகளை தவிர்க்க, பாலத்தின் மீது உயர்கோபுர விளக்கும், பொத்துார் - லட்சுமிபுரம் சாலையில், விளக்கு வசதியும் ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X