பள்ளிகள் அருகே 'டாஸ்மாக்' கடைகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகள் அருகே 'டாஸ்மாக்' கடைகள்

Added : பிப் 12, 2019
Advertisement

தாம்பரம்:பள்ளி மற்றும் கல்லுாரிகள் அருகே உள்ள, 'டாஸ்மாக்' கடைகளை, இடமாற்றம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.கிழக்கு தாம்பரம், சேலையூர் அடுத்த, இந்திரா நகர் பேருந்து நிறுத்தம் பின்புறம், டாஸ்மாக் கடை உள்ளது. அதேபோல, தனியார் கல்லுாரி பேருந்து நிறுத்தம் அருகிலும், டாஸ்மாக் கடை உள்ளது.ஏராளமான அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் அருகே, அந்த டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மாணவ -- மாணவியர், டாஸ்மாக் அருகே உள்ள, பேருந்து நிறுத்தங்களில் இருந்து, பஸ் பிடித்து, செல்ல வேண்டி உள்ளது.பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் மாணவ - மாணவியரிடம், மது போதையில் வரும் நபர்கள், அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர். மாணவியரை, கேலி செய்கின்றனர். இதனால், பேருந்து நிறுத்தங்களில் இருந்து, 100 அடி துாரம் தள்ளி நின்று, பேருந்து வந்தபின், நிறுத்தத்திற்கு ஓடிச் சென்று, மாணவ -- மாணவியர், பஸ் ஏறி செல்கின்றனர்.பள்ளிகள் உள்ள இடத்தில் இருந்து, 200 மீட்டர் தொலைவுகளில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய, அரசு தடைவிதித்துள்ளது. அந்த விதியை மீறி, சேலையூரில், டாஸ்மாக் கடை இயங்கி வருவது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இரண்டு டாஸ்மாக் கடைகளையும், உடனே இடமாற்றம் செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X