சுரங்க பாதைகள் விரைவில் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுரங்க பாதைகள் விரைவில் திறப்பு

Added : பிப் 12, 2019
Advertisement

- -நமது நிருபர்- --தாம்பரம் மற்றும் பெருங்களத்துாரில் நடந்து வந்த சுரங்கப்பாதைகள் கட்டும் பணி, முடிவுறும் நிலையில் உள்ளதால், விரைவில் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தாம்பரம், பெருங்களத்துார் ஆகிய ரயில் நிலையங்களை, தினமும், லட்சக்கணக்கான பயணியர் பயன்படுத்தி வருகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன், தாம்பரம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில், ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், நடைமேடை, சுரங்கப்பாதை அமைக்கப்படாததால் பொதுமக்கள், தண்டவாளத்தை அபாயகரமான வகையில் கடந்து செல்ல வேண்டி உள்ளது.இதற்கு தீர்வு காணும் வகையில், தாம்பரம் ரயில்வே மேம்பாலம் அருகே, 2.83 கோடி ரூபாய் செலவிலும், பெருங்களத்துார் ரயில் நிலையம் அருகே, 2.50 கோடி ரூபாய் செலவிலும், புதிதாக சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம், 2016ல் அறிவித்தது.இரண்டு ஆண்டுகளாக, பல்வேறு காரணங்களை காட்டி, சுரங்கப் பாதைகள் கட்டுமான பணி, மந்தகதியில் நடந்து வந்தன.தற்போது, 90 சதவீத கட்டுமான பணிகள் முடிந்துள்ள நிலையில், 'டைல்ஸ்' பதிப்பது மற்றும் வண்ணம் அடித்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, மார்ச் இறுதிக்குள், சுரங்க நடைபாதைகள் திறக்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X