பெசன்ட் நகரில் மணற்சிற்பம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெசன்ட் நகரில் மணற்சிற்பம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Added : பிப் 12, 2019
Advertisement

சென்னை:சாலை விதிகளை கடைப்பிடிப்பது பற்றி, சென்னை மாநகர போக்கு வரத்து போலீசார், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில், மணற்சிற்பம் வாயிலாக, விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.நாடு முழுவதும், 30வது தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி போலீசார், 'ஹெல்மெட்' அணிவதன் அவசியம் குறித்தும், சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரும், சிக்னல்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக, பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில், சாலை விதிகளை கடைப்பிடிக்காததால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து, மணற்சிற்பம் மற்றும் நாடகங்கள் வாயிலாக, சமீபத்தில் விழிப்புணர்வு செய்தனர்.அதிவேகமாக வாகனத்தில் சென்றதால், சாலை விபத்தில் சிக்கி, ரத்த வெள்ளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதுபோல, மணற்சிற்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது.அதன் அருகே நின்ற, எமன் போல் வேடமிட்டு இருந்த ஒருவர், விழிப்புணர்வு செய்தது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.நிகழ்ச்சிக்கு, சென்னை போக்குவரத்து துணை கமிஷனர், சாமிநாதன் ஏற்பாடு செய்திருந்தார். கூடுதல் கமிஷனர், அருண் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X