அரசு கல்லுாரிக்கு புதிய கட்டடம் தயார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லுாரிக்கு புதிய கட்டடம் தயார்

Added : பிப் 12, 2019
Advertisement

இட நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும்
பெரும்பாக்கம்:பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லுாரிக்கு கட்டப்பட்ட புதிய கட்டடம், இந்த மாதம் திறக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லுாரி, 2016ம் ஆண்டு துவங்கப்பட்டது. பி.ஏ., - பி.காம்., - பி.எஸ்.சி.,யில், ஏழு பாடப்பிரிவுகள் மற்றும் 450 மாணவ - மாணவியருடன், இக்கல்லுாரி செயல்பட்டு வருகிறது.வரும் ஆண்டில், புது பாடப்பிரிவுகளுடன், 1,000 மாணவ - மாணவியரை சேர்க்க, கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது, குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு கட்டிய சமூக நலக்கூடத்தில், கல்லுாரி செயல்பட்டு வருகிறது. அங்கு, அதிக இடநெருக்கடி ஏற்பட்டுஉள்ளது.கல்லுாரி கட்ட, குடிசை மாற்று வாரியம், 5.93 ஏக்கர் இடம் ஒதுக்கியது. அதில், 7.25 கோடி ரூபாயில், 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், மூன்று மாடி கொண்ட கட்டடம் கட்டப்பட்டுள்ளது.அலுவலகம், 15 வகுப்பறைகள், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அனைத்து பணிகளும், முடிவடைந்துள்ளன.திறப்பு விழா நடத்த, அரசு உத்தரவுக்காக, கல்லுாரி நிர்வாகம் காத்திருக்கிறது. இம்மாத இறுதிக்குள், புது கட்டடம் திறக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X