முதியோர் உதவித் தொகை: மீண்டும் தந்தால் தான் நிம்மதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதியோர் உதவித் தொகை: மீண்டும் தந்தால் தான் நிம்மதி

Added : பிப் 12, 2019
Advertisement
 முதியோர் உதவித் தொகை: மீண்டும் தந்தால் தான் நிம்மதி

ஊட்டி:நிறுத்தப்பட்ட முதியோர் உதவி தொகையை மீண்டும் வழங்க கோரி முதியோர் சிலர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அரசால் தகுதியுள்ள பயனாளிகளுக்கு பல்வேறு நிலையில் கீழ், முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஊட்டி அருகே கேத்தி ஓரநள்ளி கிராமத்தை சேர்ந்த பெண்கள் முதியோர் உதவி தொகை பெற்று வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகளிடம் பல முறை சென்று கேட்டும் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், கேத்தி ஓரநள்ளி பகுதியை சேர்ந்த லட்சுமியம்மா தலைமையில், பெண்கள் சிலர் நிறுத்தப்பட்ட முதியோர் உதவி தொகையை வழங்க கோரி, கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X