அதிகாலையில் கேரட் அறுவடை: போலீசாரின் நடவடிக்கை அவசியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாலையில் கேரட் அறுவடை: போலீசாரின் நடவடிக்கை அவசியம்

Added : பிப் 12, 2019
Advertisement

ஊட்டி:கேத்திபாலாடா பகுதியை சுற்றி பல்லாயிரம் ஏக்கரில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, அறுவடை செய்யப்பட்ட கேரட்டை கழுவி சுத்தம் செய்ய, கேத்தி பாலாடா பகுதிக்கு தினமும் ஏராளமான லாரிகளில் கேரட் மூட்டை கொண்டுவரப்படுகிறது.தோட்ட உரிமையாளர்கள், புரோக்கர்கள் அதிகாலையில் கூலிதொழிலாளர்களை லாரியில் ஏற்றி சம்மந்தப்பட்ட பகுதிகளுக்கு அழைத்து செல்கின்றனர். லாரிகளில் அளவுக்கு அதிகமாக கேரட் மூட்டைகளை ஏற்றுவதாலும், பின் பக்கம் தொழிலாளர்களை அமர வைத்து பயணிப்பதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது.சமீபகாலமாக விபத்துக்கள் அதிகளவில் நடந்ததால், மாவட்ட நிர்வாகம் அதிகாலையில் கேரட் அறுவடை மேற்கொள்வதற்கு தடை விதித்தது. மேலும் 'அந்தந்த பகுதியில் உள்ள போலீசார் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' எனவும், கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால், போலீசார் கண்டுகொள்ளாததால் மீண்டும் அதிகாலையில் கேரட் அறுவடை மேற்கொள்வதும், தொழிலாளர்களை பின் பக்கம் அமர்ந்து செல்வதும் தொடர்கிறது.இந்நிலையில், 'தொழிலாளர்களின் நலன் கருதி, நள்ளிரவில் கேரட் அறுவடைக்கு தொழிலாளர்கள் அழைத்து செல்வதை தடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தி, கேத்தி பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X