பள்ளி துப்புரவு பணியில் போலீசார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி துப்புரவு பணியில் போலீசார்

Added : பிப் 12, 2019
Advertisement

சென்னை:கிழக்கு சரகத்திற்கு உட்பட்ட மாநகராட்சி பள்ளிகளில், போக்குவரத்து போலீசார், துப்புரவு பணியில் ஈடுபட்டது, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.சென்னை மாநகராட்சியில், 70 உயர்நிலைப் பள்ளி, 32 மேல்நிலைப் பள்ளி உட்பட, நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.இந்த பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டும் பள்ளி துவங்குவதற்கு முன் மட்டுமே பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம்.இதையடுத்து, பள்ளி வேலை நாட்களில், துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால், குப்பை கழிவுகள் தேங்கிய பள்ளி வளாகத்தில், சுகாதாரமற்ற நிலையில், மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.இந்நிலையில், கிழக்கு சரக போக்குவரத்து காவல் எல்லைக்குள் உள்ள மாநகராட்சி பள்ளிகளை, போக்குவரத்து போலீசார் தேர்ந்தெடுத்து துாய்மைபடுத்தலாம் என, துணை கமிஷனர், அபினவ் ராவ் அறிவுறுத்தினார்.அதன்படி, நேற்று முன்தினம், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, சேத்துப்பட்டு, எழும்பூர் என, கிழக்கு சரகத்திற்கு உட்பட்ட போக்குவரத்து போலீசார், மாநகராட்சி பள்ளியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு, வண்ணமும் அடித்தனர். போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கையை, பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X