'சீல்' வைத்த கட்டடத்தில் பணிகள் துவக்கம்: ஆய்வு நடத்தினால் குளறுபடி புரியும்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'சீல்' வைத்த கட்டடத்தில் பணிகள் துவக்கம்: ஆய்வு நடத்தினால் குளறுபடி புரியும்!

Added : பிப் 12, 2019
Advertisement

குன்னுார்:குன்னுாரில் நகராட்சியால் 'சீல்' வைத்த கட்டடங்களில் மீண்டும் பணிகள் நடந்து வருவது குறித்து, ஆய்வு நடத்த வேண்டும்.குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆளும்கட்சியினர் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் செய்தும், விதிமுறைகளை மீறியும் கட்டடங்களை கட்டி வருகின்றனர்.இதனை தடுக்க வேண்டிய நகராட்சி நகர திட்ட அலுவலர்கள் கண்டுகொள்ளாமல், ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால், 'சீல்' வைத்த கட்டடம் உட்பட பல்வேறு, விதிமீறிய கட்டடங்களும் அதிகளவில் கட்டப்பட்டு வருகின்றன.இந்நிலையில், 'புரூக்லேண்ட்' அருகே நகராட்சியின் பூங்கா ஆக்கிரமிக்கப்பட்டதை உடனடியாக மீட்க ஐகோர்ட் உத்தரவிட்டும் இதுவரை மீட்கப்படாமல் உள்ளது. சி.எம்.எஸ்., அருகே, சாலையோரத்தில், வனப்பகுதிக்கு அருகே, நகராட்சியால் 'சீல்' வைத்த கட்டடத்தில், மீண்டும் பணி நடந்து வருகிறது. இது குறித்து புகார் அளித்தும், நகராட்சியும், வனத்துறையும் கண்டுகொள்ளாமல் உள்ளன. மேலும், 'மவுன்ட்பிளசன்ட்' பகுதியிலும் 'சீல்' வைத்த மற்றொரு கட்டடத்திலும் பணி நடந்து வருகிறது. அம்பேத்கார் நகரில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டடம் கட்டுவது குறித்து கவர்னருக்கு நேரில் மனுகொடுத்தும் நடவடிக்கை இல்லை.இதில், பெரும்பாலானவர்கள் ஆளும்கட்சியினர் என்பதால், மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் மவுனம் காத்து வருகிறது.மக்கள் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில், ''எங்கெங்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளதோ அந்த கட்டடங்கள் குறித்தும், தற்போது 'சீல்' அகற்றப்பட்டு பணிகள் நடந்து வருவது குறித்தும் நேர்மையான அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X