தங்கம் வென்ற தமிழகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தங்கம் வென்ற தமிழகம்

Added : பிப் 12, 2019
Advertisement

சென்னை:ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில், இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் சார்பில், தேசிய அளவிலான பள்ளி மாணவ - மாணவியருக்கான, 'ரக்பி' போட்டி சமீபத்தில் நடந்தது.இதில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இதில், 14 மற்றும் 17 வயதிற்குட்பட்ட இரு பிரிவுகளில், போட்டிகள் நடந்தன. 14 வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவில், தமிழக அணி வெற்றி பெற்று, தங்கப் பதக்கத்தை வென்றது.மேலும், 17 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் பங்கேற்ற தமிழக அணி, இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X