பயன்பாட்டிற்கு வராத கழிப்பறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயன்பாட்டிற்கு வராத கழிப்பறை

Added : பிப் 12, 2019
Advertisement

மெரினா:மெரினா சர்வீஸ் சாலையில், புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறையை திறக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சென்னையின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் மெரினா கடற்கரைக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து, தினமும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.இங்கு வரும் சுற்றுலா பயணியர் வசதிக்காக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள், பெரும்பாலும் சேதமடைந்து கிடக்கின்றன. இதனால், கடைகளில் கூடுதல் விலை கொடுத்து, குடிநீர் வாங்க வேண்டி உள்ளது.இது குறித்து எழுந்த புகாரை அடுத்து, தமிழ்நாடு சுற்றுலா துறையின் சார்பில், கடற்கரை பகுதிகளின், நான்கு இடங்களில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி, தற்போது, 61 லட்சம் ரூபாய் செலவில், குடிநீர் மையம் அமைக்கும் பணி, 90 சதவீதம் முடிந்துள்ளது.அதே போல், கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணியருக்காக, 1.67 லட்சம் செலவில், கூடுதலாக இரண்டு கழிப்பறைகள், இரண்டு வாரத்திற்கு முன் கட்டி முடிக்கப்பட்டன. ஆனால், இன்று வரை அவை பயன்பாட்டிற்காக திறக்கப்படவில்லை.சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கட்டி முடிக்கப்பட்டுள்ள கழிப்பறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X