மயிலாப்பூர்:நமது நாளிதழில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, சேறும் சகதியுமான, பி.எஸ்.சிவசாமி சாலை, நேற்று சீரமைக்கப்பட்டது.தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட, மயிலாப்பூரில், பி.எஸ்.சிவசாமி சாலை உள்ளது. இந்த சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை - ராதாகிருஷ்ணன் சாலையை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது. இதனால், எந்நேரமும் வாகனங்கள் போக்குவரத்து அதிகளவில் இருக்கும். இந்நிலையில், ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து, பி.எஸ்.சிவசாமி சாலைக்கு திரும்பும் இடத்தில், குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக, சில நாட்களுக்கு முன் பள்ளம் தோண்டி, சீரமைக்கப்படவில்லை. இதனால், மண் குவிந்திருந்த சாலை, வாகன போக்குவரத்தால் சேறும் சகதியுமாக மாறியது.இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று, சேறும் சகதியுமான, பி.எஸ்.சிவசாமி சாலையை சீரமைத்தனர்.