குழந்தைகள் மைய கட்டடம் சீரமைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் மைய கட்டடம் சீரமைப்பு

Added : பிப் 12, 2019
Advertisement

நீலாங்கரை:மிகவும் சேதமடைந்திருந்த குழந்தைகள் மையத்தை, நீலாங்கரை போக்குவரத்து போலீசார், சீரமைத்துக் கொடுத்தனர்.சோழிங்கநல்லுார் மண்டலம், 196வது வார்டு, சின்ன நீலாங்கரை பகுதியில், குழந்தைகள் மையம் உள்ளது. அங்கு, 50 குழந்தைகள் படிக்கின்றனர்.அங்குள்ள மேற்கூரையில், 'ஆஸ்பெட்டாஸ் ஷீட்' போடப்பட்டுள்ளது. கட்டடம் மிகவும் பழமையானதால், குழந்தைகளை அங்கு அனுப்ப பெற்றோர் அச்சப்பட்டனர்.மாநகராட்சி சார்பில், சீரமைப்பு பணிக்கான நிதி ஒதுக்குவதில், காலதாமதமும் ஏற்பட்டது. அதுவரை, கட்டடத்தை பாதுகாக்கும் வகையில், நீலாங்கரை போக்குவரத்து போலீசார், பராமரிப்பு பணியை செய்ய முன்வந்தனர்.விரிசல் மற்றும் மேற்கூரையை சரி செய்து, வண்ணம் பூசி, மையத்தை அழகு படுத்தினர். மேலும், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், குடிநீர் வசதி செய்து கொடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X