திட்டமிடாத வடிகாலால் சாலை, 'அவுட்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திட்டமிடாத வடிகாலால் சாலை, 'அவுட்'

Added : பிப் 12, 2019
Advertisement

வளசரவாக்கம்:காரம்பாக்கத்தில், முறையான திட்டமிடல் இல்லாமல் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகாலால் சாலை குறுகலாகி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.சென்னையில், 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில், வளசரவாக்கம் மண்டலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து, உலக வங்கி நிதியில், வளசரவாக்கம் மண்டலம் முழுவதும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 150வது வார்டு காரம்பாக்கம், அவ்வை தெருவிலும், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. காரம்பாக்கத்தில் இருந்து வானகரம் மற்றும் போரூர் சுங்கச் சாவடிக்கு செல்ல, இந்த சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால், சாலை மட்டத்தில் இருந்து, 3 அடி உயரமாக உள்ளது.இதனால், கார் மற்றும் மினி வேன்கள் சென்று வந்த சாலை, இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்லும் அளவிற்கு குறுகி விட்டது. மாநகராட்சி அதிகாரிகளின் முறையற்ற திட்டமிடல் காரணமாக, அவ்வை தெரு குறுகி, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், இந்த சாலையில் மின்விளக்குகள் இல்லாததால், வழிப்பறி சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.மாநகராட்சி அதிகாரிகள், இப்பகுதியில் உள்ள வடிகாலை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X