மெட்ரோ ரயில் ஸ்டோரி பாக்ஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மெட்ரோ ரயில் ஸ்டோரி பாக்ஸ்

Added : பிப் 12, 2019
Advertisement

2ம் திட்டம் விரைவில் துவக்கம்!சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்தில், 118.90 கி.மீ.,யில், மூன்று வழித்தடங்களில், மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக, மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லுார் வரையும், மாதவரத்தில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வரையும், 52.01 கி.மீ., பாதை திட்டத்தை செயல்படுத்த, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, 20 ஆயிரத்து, 196 கோடி ரூபாய் நிதி வழங்க, ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்திற்கான, மொத்த மதிப்பீடு, 40 ஆயிரத்து, 941 கோடி ரூபாய். இந்த பணிகளை மேற்கொள்ள, மாநில அரசு நிர்வாக அனுமதி அளித்து உள்ளது. திட்டத்திற்கு, இந்த பட்ஜெட்டில், 2,681 கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன.2020 ஜூனில் விம்கோ நகர்!சென்னை மெட்ரோ ரயில் முதல் திட்டத்தில், விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை, பரங்கிமலை - சென்ட்ரல் இடையே, 45.01 கி.மீ., பாதை பணி முடிந்து, ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் நீட்டிப்பில், வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே, 9.2 கி.மீ., பாதை கட்டுமான பணி நடந்து வருகிறது. இதுவரை, 60 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள், துரிதமாக நடந்து வரும் நிலையில், இப்பணி, 2020 ஜூனில் முடிந்து, ரயில் போக்குவரத்து துவங்க, மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X