சென்னை:ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், யோகா மற்றும் தியான கூடம் திறக்கப்பட்டுள்ளது.சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், கல்லீரல் துறையில், அதிநவீன கதிரியல் இடையீடு தொகுப்பகம், 1.57 கோடி ரூபாய் செலவில், சமீபத்தில் துவக்கி வைக்கப்பட்டது. அன்றைய தினமே, யோகா மற்றும் தியான பயிற்சி கூடமும், துவங்கி வைக்கப்பட்டது.