திருநங்கை நூரிக்கு விருது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருநங்கை நூரிக்கு விருது

Added : பிப் 12, 2019
Advertisement

சென்னை:சென்னை, சமூகப்பணி கல்லுாரியின் நிறுவனர் நாள் விழாவில், திருநங்கை நுாரிக்கு, 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கப்பட்டது.சென்னை, எழும்பூரில் உள்ள, சமூகப்பணி கல்லுாரியின் நிறுவனர், மேரி கிளப் வாலா ஜதவின் நினைவு நாள் விழா, சமீபத்தில் கொண்டாடப்பட்டது.இவ்விழாவில், 'இண்டர்வீவ் கன்சல்டிங்' நிறுவனர் நிர்மலா மேனன், சமூகப்பணியில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும், வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, திருநங்கை நுாரி சலீமுக்கு வழங்கினார்.'எய்ட்ஸ்' நோயால், பாதிக்கப்பட்ட நிலையிலும், அந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நுாரி சலீம், 'சவுத் இண்டியா பாசிட்டிவ் நெட்வொர்க்' அமைப்பை நிறுவியுள்ளார்.மேலும், எய்ட்ஸ் கட்டுப்பாடு, திருநங்கையரின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டது உள்ளிட்ட காரணங்களுக்காக, இவருக்கு, இந்த விருது வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X