'ஆன்லைன்' விண்ணப்பம் பெறுவது | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' விண்ணப்பம் பெறுவது

Added : பிப் 12, 2019
Advertisement

சி.எம்.டி.ஏ., முடிவுக்கு மாநகராட்சி காத்திருப்பு
- நமது நிருபர் -
அதிகார பகிர்வு மற்றும் பொது கட்டட விதிகளை, 'ஆன் - லைன்' மென்பொருளில் சேர்க்கும் பணிகள் காரணமாக, சென்னை மாநகராட்சியில், புதிய கட்டுமான திட்ட அனுமதி விண்ணப்பங்கள் பெறுவது, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.ஊராட்சி முதல் மாநகராட்சி வரை, அனைத்து பகுதிகளிலும் அமல்படுத்தும் வகையில், பொது கட்டட விதிகளை, தமிழக அரசு, பிப்., 4ல் அறிவித்தது. இதில், உள்ளாட்சி அமைப்பு வாயிலாக வழங்கப்படும் திட்ட அனுமதியில் தான், அதிக மாறுதல்கள் ஏற்படுகின்றன.இதற்காக, பொது கட்டட விதிகளை, 'ஆன் லைன்' முறையில், திட்ட அனுமதி விண்ணப்பங்கள் பெறும், மென்பொருளில் சேர்க்க வேண்டும்.அரசு உத்தரவுப்படி, மூன்று மாடி வரையிலான கட்டட அனுமதி வழங்கும் அதிகாரத்தை, மாநகராட்சிக்கு மாற்ற, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., நடவடிக்கை எடுக்க வேண்டும்.இப்பணிகள், எதிர்பார்த்த வேகத்தில் நடக்காததால், மாநகராட்சியில், 'ஆன்லைன்' திட்டத்தில், புதிய விண்ணப்பங்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர், டி.கார்த்திகேயன், பிரிவு அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவு:பொது கட்டட விதிகளின் அடிப்படையில், சி.எம்.டி.ஏ.,வின் அதிகார பகிர்வுக்கான கடிதத்தை பெற காத்திருக்கிறோம்.இதே சமயத்தில், ஆன் லைன் விண்ணப்பம் பெறும் மென்பொருளில், புதிய விதிகளை உள்ளீடு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் முடியும் வரை, ஆன்லைன் முறையில், புதிய வண்ணப்பங்கள் பெற வேண்டாம்.திட்ட அனுமதி வரைபடங்களை, ஆன்லைன் முறையில் ஆய்வு செய்வதும், நிறுத்தி வைக்கப்படுகிறது.திட்ட அனுமதி விண்ணப்பங்களை, காகித வடிவில் பெற்று, அதற்கான கட்டண கேட்பு விபரங்களையும், காகித வடிவிலேயே அளிக்க, அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.பிப்., 15க்கு பின், ஆன் லைன் முறையில், கட்டுமான திட்ட விண்ணப்பம் பெறும் பணிகள், வழக்கமான நிலைக்கு வரும்.இவ்வாறு, அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X