குறைதீர் முகாம்167 பேர் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குறைதீர் முகாம்167 பேர் மனு

Added : பிப் 12, 2019
Advertisement

சென்னை:சென்னை ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று காலை நடந்த குறைதீர் முகாமில், 167 பேர், பல்வேறு கோரிக்கைகளுக்கான மனு அளித்தனர்.சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை அன்று, பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இதனாபடி, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று, குறைதீர் கூட்ட முகாம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு, 167 பேர் மனு அளித்தனர்.இந்த விண்ணப்பங்களை பெற்று அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிகளுக்கு பரிந்துரைத்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறினர்.மேலும், ஏற்கனவே நடந்த குறைதீர் முகாம்களில் பெறப்பட்ட, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட, நான்கு மனுதாரர்களுக்கு, உதவித்தொகைக்கான ஆணைகளை, மாவட்ட வருவாய் அலுவலர், சு.கருணாகரன் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X