பொது செய்தி

தமிழ்நாடு

பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் அடுத்த மாதம் பணிகள் துவங்கும் ரயில்வே மேலாளர் தகவல்

Added : பிப் 12, 2019
Advertisement
பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் அடுத்த மாதம் பணிகள் துவங்கும் ரயில்வே மேலாளர் தகவல்

ராமேஸ்வரம்: பாம்பன் கடலில் புதிய ரயில் பால கட்டுமானப் பணி மார்ச்சில் துவங்கும், என ரயில்வே கட்டுமான நிறுவனத்தின் தலைமை திட்ட மேலாளர் பி.கே.ரெட்டி தெரிவித்தார்.பாம்பன் கடல் மீது 1914ல் ரயில் பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து துவங்கியது. நுாற்றாண்டு விழா கண்ட பாலத்தின் நடுவில் உள்ள துாக்கு பாலத்தின் இரும்பு பிளேட்டில் விரிசல் ஏற்பட்டு டிச.,4 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை ரத்தானது. பணிகள் தற்போது முடிந்துள்ளன.இந்நிலையில், பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் அமைக்கப்படும் என்று ஜன.,27ல் மதுரையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து பாம்பன் கடலோரம், கடலுக்கு அடியில் உள்ள மண்ணில் உப்பு மற்றும் காரத் தன்மை குறித்து பரிசோதிக்க மிதவைகள் அமைத்து மண் சேகரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று ரயில்வே கட்டுமான நிறுவனத்தின் தலைமை திட்ட மேலாளர் பி.கே.ரெட்டி, ஓய்வுபெற்ற ரயில்வே கட்டுமான பிரிவு பொறியாளர் அன்பழகன், பாம்பன் பாலம் பொறியாளர் ஆகியோர் பாம்பன் கடற்கரையில் இருந்து நாட்டுபடகில் புறப்பட்டு புதிய பாலம் அமைய உள்ள கடல் பகுதியை பார்வையிட்டனர். பின் பி.கே.ரெட்டி கூறியதாவது:தற்போதைய பாம்பன் ரயில் பாலத்திற்கு வடக்கில் 30 மீ., துாரத்தில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கேற்கும் விதத்தில் உலகளவிலான டெண்டர் விடப்பட உள்ளது. மார்ச் இறுதியில் பணிகள் துவங்கும். இரு ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்படும்.தற்போதைய பாலத்தை விட 3 மீட்டர் உயரத்தில் புதிய பாலம் அமைய உள்ளதால் துாக்கு பாலம் வழியாக ஆழ்கடல் மீன்பிடி படகுகள், சிறிய ரக கப்பல்கள் எளிதில் கடந்து செல்லும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X