பிற மதத்தினரை தவறாக பேசக்கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பிற மதத்தினரை தவறாக பேசக்கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : பிப் 12, 2019
Advertisement

மதுரை: மதம் தொடர்பான நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்கும்போது,'பிற மதத்தினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள் குறித்து குறைவாக மதிப்பிட்டு பேசமாட்டோம் என்ற உத்தரவாதத்தை நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் போலீசார் பெற வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.கன்னியாகுமரி காஞ்சிரகோடு தேவ ஆசீர் தாக்கல் செய்த மனு: காஞ்சிரகோடு அரசு புறம்போக்கு நிலத்தில் நற்செய்தி கூட்டம் நடத்த மார்த்தாண்டம் போலீசாரிடம் அனுமதி கோரினோம். மறுத்தனர்.அதை ரத்து செய்து அனுமதி மற்றும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி என்.சேஷசாயி உத்தரவு: இம்மாதிரி வழக்குகளில் நீதிமன்றம் தலையிடாது. இதுபோன்ற வழக்குகளில் முடிவெடுக்கக்கூடிய அரசு அதிகாரிகள் தன்னிச்சையாக, உள்நோக்குடன் செயல்பட்டதற்கு முகாந்திரம் இருந்தால் நீதிமன்றம் தலையிடும். வெளியில் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு, நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டிருக்காது.அனைத்து மதத்தினரும் அவரவரர் மதத்தை பின்பற்ற அரசியலமைப்புச் சட்டம் உரிமை அளித்துள்ளது. மதம் தொடர்பான கூட்டங்களின் போது அரசியலமைப்புச் சட்டத்தின் உள்ள மதச்சார்பின்மைக்கு பங்கம் ஏற்படாத வகையில், நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதிக்கும். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்காமல் அவரவர் மதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது.இதுபோன்ற மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது, சம்பந்தப்பட்ட மதத்தைச் சேர்ந்த பொறுப்பாளரிடம், 'பிற மதத்தினர் மற்றும் அவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசமாட்டோம். மீறினால் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு கட்டுப்படுவோம்,' என எழுத்துப் பூர்வமாக உத்தரவாதம் பெற வேண்டும்.இவ்வழக்கில் மனுதாரர் மனுவை பரிசீலித்து அனுமதியளிக்க வேண்டும். பிற மதத்தினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள் குறித்து குறைவாக மதிப்பிட்டு பேசமாட்டோம் என்ற உத்தரவாதத்தை நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் போலீசார் பெற வேண்டும், என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X