பொது செய்தி

தமிழ்நாடு

திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி தாமதம்

Added : பிப் 12, 2019
Advertisement

மதுரை: கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ராமநாதபுரம் வழக்கறிஞர் திருமுருகன் தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் மணிமண்டபம் அருகே பாறையில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவை கடலின் உப்புக் காற்றால் பொலிவு இழக்காமல் இருக்க பராமரிப்பு பணி மேற்கொள்வது அவசியம். சுற்றுலாத்துறை சார்பில் 2013 ல் திருவள்ளுவர் சிலையில் காகிதக்கூழ் ஒட்டப்பட்டு, உப்புநீர் உறிஞ்சப்பட்டது. ரசாயனக் கலவை பூசி, பொலிவு பெறச் செய்யப்பட்டது. தற்போது சிலையைக் காண சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சிலை பராமரிப்பிற்கு தமிழக அரசு 1.10 கோடி ரூபாய் ஒதுக்கியது. பராமரிப்பு பணி பாதியில் நிற்கிறது. படகு போக்குவரத்து வசதியை மீண்டும் துவக்க வேண்டும்.கடற்கரையிலிருந்து திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கு பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு திருமுருகன் மனு செய்தார்.

நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு தமிழக சுற்றுலாத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி 2 வாரங்கள் ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X