கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சி அம்மன் பெயர் சூட்ட வழக்கு

Added : பிப் 12, 2019
Advertisement

மதுரை: மதுரை விமான நிலையத்திற்கு கடவுள் தேவேந்திரன் அல்லது மீனாட்சி அம்மன் பெயரை சூட்ட தாக்கலான வழக்கில் மத்திய அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் உரிமை மீட்பு இயக்க தலைவர் செல்வகுமார் தாக்கல் செய்த மனு: மதுரை விமான நிலையம் அமைக்க எங்கள் சமூக மக்களின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. விமான நிலையம் விரிவாக்கத்திற்கு அயன்பாப்பாகுடியின் சின்ன உடைப்பை சேர்ந்த எங்கள் சமூகத்தினரின் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு ஈடு செய்யும் வகையில் கடவுள் தேவேந்திரன் பெயர் அல்லது மீனாட்சி அம்மன் பெயரைச் சூட்ட வேண்டும் என மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறைக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். தேவேந்திரன் அல்லது மீனாட்சி அம்மன் பெயர்களைத் தவிர்த்து வேறு எந்த தலைவர்களின் பெயர்களை சூட்ட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு செல்வகுமார் மனு செய்தார். திருநெல்வேலியைச் சேர்ந்த கூடுதல் எஸ்.பி., (ஓய்வு) சிவ ஜெயப் பிரகாஷ்,'மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சி அம்மன் பெயரைச் சூட்ட வேண்டும். பாண்டிய மன்னனின் மீன் கொடியை பறக்கவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறைக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார்.நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு,'மனுக்களை மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து, 6 மாதங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X