பூட்டி கிடக்கும் வீடுகளை கணக்கெடுக்கும் போலீஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பூட்டி கிடக்கும் வீடுகளை கணக்கெடுக்கும் போலீஸ்

Added : பிப் 12, 2019
Advertisement

சென்னை:'சென்னையில், குற்றத் தடுப்பு நடவடிக்கையாக, பூட்டிக் கிடக்கும் வீடுகளை, ரோந்து போலீசார் தினமும் கணக்கெடுத்து, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள, 135 காவல் நிலைய எல்லைகளிலும், குற்றத் தடுப்புக்காக, இரண்டு லட்சம், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் பதிவாகும் காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்தும் வருகின்றனர்.இந்நிலையில், சில தினங்களாக, சென்னையில் பூட்டிக் கிடக்கும் வீடுகளில், கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.இதனால், ரோந்து போலீசார், பூட்டிக் கிடக்கும் வீடுகள் பற்றி, தினமும் கணக்கெடுத்து, காவல் கட்டுப்பாட்டு மையம் வாயிலாக, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:வெளியூர் செல்ல நேரிட்டால், அருகில் உள்ள காவல் நிலையங்களில், பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என, பல முறை அறிவுறுத்தி உள்ளோம்.தகவல் தெரிவித்தால், பூட்டிக் கிடக்கும் வீடுகள் மீது, சிறப்பு கவனம் செலுத்த உதவியாக இருக்கும். ஆனால், சிலர் மட்டுமே, வீடுகளை பூட்டிவிட்டு, வெளியூர் செல்வதை தெரிவிக்கின்றனர்.மற்றவர்கள், கொள்ளை நடந்த பின், 'நகை, பணம் பறிபோய்விட்டது; நீங்கள் தெரிவித்ததை போல் தகவல் தெரிவித்து இருந்தால், இந்த சம்பவம் தடுக்கப்பட்டு இருக்கலாம்' என, வருத்தம் தெரிவிக்கின்றனர்.இதனால், குற்றத் தடுப்பு நடவடிக்கையாக, சென்னை முழுவதும், ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார், பூட்டிக் கிடக்கும் வீடுகள் பற்றி, கணக்கெடுத்து தெரிவிக்க வேண்டும்.அந்த வீடுகள், போலீஸ் கண்காணிப்பில் உள்ளதா என, இன்ஸ்பெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X