சரக்கு கப்பல் மோதி மூழ்கிய விசைப்படகு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சரக்கு கப்பல் மோதி மூழ்கிய விசைப்படகு

Added : பிப் 12, 2019
Advertisement

காசிமேடு:சரக்கு கப்பல் மோதி, விசைப்படகு மூழ்கியதால், காசிமேடு மீனவர்கள், பைபர் படகில் கரை சேர்ந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை, காசிமேட்டைச் சேர்ந்தவர் சின்னதுரை, 45. இவருக்கு சொந்தமான விசைப்படகில், 11 மீனவர்கள், 9ம் தேதி காலை, ஆந்திர கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றனர்.நேற்று நள்ளிரவு, ஆந்திர எல்லையில், இவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, கன்டெய்னர் ஏற்றி வந்த சரக்கு கப்பல், விசைப்படகின் மீது, பயங்கரமாக மோதியது.இந்த விபத்தில், படகில் ஓட்டை விழுந்து, நேற்று நள்ளிரவு கடலில் மூழ்கியது. இதையடுத்து, விசைப்படகில் இருந்த பைபர் படகின் மூலம், மீனவர்கள் தப்பி, காசிமேடு கடற்கரையை, நேற்று மதியம் வந்தடைந்தனர்.இது குறித்து, சின்னதுரை கொடுத்த புகாரின் அடிப்படையில், காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார், வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X