கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பெண் அதிகாரி அளித்த பாலியல் புகார் நடவடிக்கை எடுக்காதது துரதிருஷ்டம்

Added : பிப் 12, 2019
Advertisement

சென்னை: 'போலீஸ் ஐ.ஜி.,க்கு எதிராக, பெண் அதிகாரி அளித்த பாலியல் புகார் குறித்து, ஆறு மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்காதது, துரதிருஷ்டமானது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரிக்கு எதிராக, பெண் போலீஸ் அதிகாரி, பாலியல் தொந்தரவு புகார் அளித்தார். இதுகுறித்து விசாரிக்க, கூடுதல் டி.ஜி.பி., சீமா அகர்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு பரிந்துரைத்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், ஐ.ஜி., மனு தாக்கல் செய்தார்.மனு, நீதிபதி, எஸ்.எம்.சுப்ரமணியம் முன், விசாரணைக்கு வந்தது. இரு தரப்பிலும், வழக்கறிஞர்கள் வாதாடினர். விசாரணையின் போது, நீதிபதி கூறியதாவது: ஒரு அதிகாரிக்கு எதிராக, மற்றொரு அதிகாரி புகார் கொடுத்துள்ளார். ஆறு மாதங்கள் ஆகியும், எந்த நடவடிக்கையும் இல்லை. இது, துரதிருஷ்டமானது. புகாரில் உண்மை இருந்தால், நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், நிராகரிக்க வேண்டும்.எந்த நடவடிக்கையும் எடுக்காததை, ஏற்க முடியாது. ஒரு பெண் அதிகாரி, துணிந்து புகார் அளிக்கும் போது, அதுகுறித்து, உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். இதுபோன்ற புகார்கள் அளிக்க, பெண்கள் தைரியமாக முன்வரும் போது, சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில், அரசுக்கு என்ன தயக்கம்.இவ்வாறு, நீதிபதி கூறினார்.பின், விசாரணையை, நாளைக்கு தள்ளி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X