பேருந்தில் ஓட்டுனர் மரணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பேருந்தில் ஓட்டுனர் மரணம்

Added : பிப் 12, 2019
Advertisement

கோயம்பேடு:அரசு பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனர், திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். வேலுார் மாவட்டம், திருப்பத்துார் தாலுகா, பேரம்புட் கிராமத்தைச் சேர்ந்தவர், ரமேஷ், 55. இவர், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில், பேருந்து ஓட்டுனராக பணி புரிந்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, திருப்பத்துாரில் இருந்து, 50க்கும் மேற்பட்ட பயணியரை ஏற்றிக் கொண்டு, கோயம்பேடு நோக்கி, பேருந்தை ஓட்டி வந்தார்.நேற்று அதிகாலை, நெற்குன்றம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, ரமேஷுக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர், பேருந்தை சாலையோரமாக நிறுத்தினார்.பயணியர், '108 ஆம்புலன்ஸ்' சேவையை, தொடர்பு கொண்டு, தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு, ரமேஷை அனுப்பி வைத்தனர்.அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து, கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.நெஞ்சு வலி ஏற்பட்ட போது, ரமேஷ், சாமர்த்தியமாக, சாலையோரம் பேருந்தை நிறுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X