ராகு, கேது பெயர்ச்சி ஹோமம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராகு, கேது பெயர்ச்சி ஹோமம்

Added : பிப் 12, 2019
Advertisement

சென்னை:மேற்கு மாம்பலம், அயோத்தியா மண்டபத்தில், ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு ஹோமம், சர்ப்ப சாந்தி பூஜை நடக்கிறது.நவக்கிரகங்களில், ராகு, கேது, சாயாக் கிரஹங்கள் என, அழைக்கப்படுகின்றன. நாளை மதியம், 2:00 மணிக்கு, ராகு பகவான், கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், கேது பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும் இடம் பெயர்கின்றனர்.இதை ஒட்டி, நாராயண ஐயர் நினைவு அறக்கட்டளை, அருளமுதம்வேத வித்யா குருகுலம் ஆகியவை இணைந்து, ராகு, கேது பெயர்ச்சி ஹோமம், சர்ப்ப சாந்தி பூஜையை, மேற்கு மாம்பலம், அயோத்தியா மண்டபத்தில், இன்றும், நாளையும் நடத்துகின்றன.நாளை காலை, கணபதி பூஜை, ஹோமம் நடத்தப்படுகிறது. பின், வஸோதாரா ஹோமம், மகா பூர்ணாஹுதி நடக்கிறது. அதைத்தொடர்ந்து, ராகு, கேது பெயர்ச்சி பலன் கூறப்படுகிறது.மாலை, 5:00 மணிக்கு, சர்ப்ப சாந்தி பூஜை நடத்தப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X