பசுவின் பசி போக்கிய போலீஸ் : காவலர்களுக்கு கமிஷனர் பாராட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பசுவின் பசி போக்கிய போலீஸ் : காவலர்களுக்கு கமிஷனர் பாராட்டு

Updated : பிப் 12, 2019 | Added : பிப் 12, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 பசுவின் பசி போக்கிய போலீஸ் : காவலர்களுக்கு கமிஷனர் பாராட்டு

சென்னை:சாலையில் கிடந்த, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பசுவின், பசியை போக்கி, 'புளூ கிராஸ்' அமைப்பிடம் ஒப்படைத்த, எஸ்.ஐ., மற்றும் போலீஸ்காரருக்கு, கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டி, வெகுமதி அளித்தார்.சென்னை, மயிலாப்பூர் காவல் நிலையத்தில், எஸ்.ஐ.,யாக, பாண்டியனும், போலீஸ்காரராக, ஜெயச்சந்திரனும் பணியாற்றி வருகின்றனர்.இருவரும், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, மயிலாப்பூர், லஸ் சர்ச் சாலையில், நாகேஸ்வர ராவ் பூங்கா அருகே, ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அங்கு, சாலையின் நடுவே, நிறைமாத கர்ப்பிணியான பசு ஒன்று, எழ முடியாமல், விழுந்து கிடந்தது.இதையடுத்து, பசு மீது, வாகனங்கள் மோதிவிடாதவாறு, இருவரும், 'பேரிகார்டு' எனும், தற்காலிக தடுப்புகளை அமைத்தனர். பின், பொது மக்கள் உதவியுடன், கீரை கட்டுகள், வைக்கோல் வாங்கி வந்து, பசுவின் பசி போக்கினர். வாளியில் தண்ணீர் வைத்து, அதன் தாகம் தீர்த்தனர்.மேலும், விலங்குகள்நல அமைப்பான, 'புளூ கிராஸ்' நிர்வாகிகளுக்கு, தகவல் தெரிவித்தனர். அவர்கள், நள்ளிரவு, 12:00 மணிக்கு, விலங்குகளை ஏற்றிச் செல்லும் விசேஷ வாகனத்தில், பசுமாட்டை ஏற்றி, மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.பசுவின் பசியை போக்கி, மருத்துவ உதவி கிடைக்க ஏற்பாடு செய்த, பாண்டியன் மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோரை, கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் நேற்று, நேரில் அழைத்து, பாராட்டி, வெகுமதி அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-பிப்-201914:43:00 IST Report Abuse
ஸாயிப்ரியா காவலர்களின் கருணை மகிழ்ச்சி யாகவும் நெகிழ்ச்சி யாகவும் உள்ளது. பாராட்டுக்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X