ஆண்களுக்கு நவீன கருத்தடை தங்க நாணயம் இலவசம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்களுக்கு நவீன கருத்தடை தங்க நாணயம் இலவசம்

Added : பிப் 12, 2019
Advertisement

சென்னை:'தினமலர்' நாளிதழ், வேல்ஸ் பல்கலைக் கழகம், மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து, ஆண்களுக்கான குடும்ப நல நவீன கருத்தடை சிகிச்சை முகாம் நடத்த உள்ளன.இந்த சிகிச்சை மேற்கொள்வோருக்கு, ஊக்கத் தொகையுடன், தங்கம், வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட உள்ளன.ஆண்களுக்கான குடும்பநல நவீன கருத்தடை சிகிச்சையை, அரசுஊக்குவித்து வருகிறது.இதையடுத்து, மேடவாக்கம், ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில்,பல ஆண்டுகளாக, கருத்தடை சிகிச்சை முகாம் நடத்தப்பட்டுவருகிறது.அதன் ஒரு பகுதியாக, வரும், 16ம் தேதி, மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆண்களுக்கான குடும்பநல, நவீன கருத்தடை சிகிச்சை முகாம் நடக்க உள்ளது.இந்த முகாமில், கருத்தடை செய்து கொள்ளும் நபர்களுக்கு, அரசு ஊக்கத்தொகையாக, 1,100 ரூபாயும், 'தினமலர்' நாளிதழ், வேல்ஸ் பல்கலைக் கழகம் சார்பில், அரை கிராம் தங்க நாணயம், 25 கிராம் வெள்ளி நாணயம் ஆகியவையும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.இது குறித்து, மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர், ரவிச்சந்திரன் கூறியதாவது:தையல் இன்றி, தழும்புகள் இன்றி, இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. மிகவும் எளிமையானது. மயக்க மருந்து கூட கொடுப்பதில்லை. பக்க விளைவுகளும் கிடையாது.சிகிச்சை முடிந்த உடன், வீட்டிற்கு சென்றுவிடலாம். இந்த சிகிச்சை மேற்கொள்ள, மற்றவர்களை அழைத்து வரும் நபர்களுக்கும், ஊக்கத் தொகையாக, 200 ரூபாய் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.மேலும் விபரங்களுக்கு, 99620 81581, 90949 43939, 94428 07464 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X