குடிநீரில் கழிவுநீர் மக்கள் மறியல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீரில் கழிவுநீர் மக்கள் மறியல்

Added : பிப் 12, 2019
Advertisement

புதுவண்ணாரப்பேட்டை:குடிநீரில், கழிவுநீர் கலந்து வருவதால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, மங்கம்மாள் தோட்டம் பகுதியில், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், குடிநீரில், கழிவுநீர் கலந்து, துர்நாற்றத்துடன் வருகிறது. மேலும், பாதாள சாக்கடை அடைத்து, ஆங்காங்கே, கழிவுநீர் தேங்கி நிற்கிறது.இது குறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகளிடம், பலமுறை முறையிட்டும், எந்தவித நடவடிக்கையும் இல்லை.இதையடுத்து, 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தண்டையார்பேட்டை, ஏ.இ.கோவில் தெருவில், நேற்று மதியம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வந்து, சமரசம் பேசியதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X