பிளாஸ்டிக் பைகளுக்கு, 'குட் பை' பொட்டலம் மடிக்கும் பழ வியாபாரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் பைகளுக்கு, 'குட் பை' பொட்டலம் மடிக்கும் பழ வியாபாரி

Added : பிப் 12, 2019
Advertisement

ஆர்.கே.பேட்டை:சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்க்கும் சிறு வியாபாரிகளின் நடவடிக்கை, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. பழ வியாபாரிகளும், பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, பழங்களை காகிதத்தில் கட்டி கொடுக்க துவங்கி உள்ளனர்.ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு, கடந்த மாதம், 1ம் தேதி முதல் அரசு தடை விதித்துள்ளது. விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகளும், கடைகளில் புகுந்து அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு விதித்துள்ள சட்டத்தை மதிக்கும் விதமாக, பொதுமக்களும், துணிப் பைகளை பயன்படுத்த துவங்கி விட்டனர்.அதே போல், கடும் விமர்சனத்திற்குள்ளாகி வந்த சிறு வியாபாரிகளும், தற்போது, பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, காகித பொட்டலங்களில், பொருட்களை கட்டித் தர துவங்கி விட்டனர்.இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சாலையோர துரித உணவகங்களும், தங்களின் நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டு வந்தால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்பது உறுதி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X