872 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

872 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Added : பிப் 12, 2019
Advertisement

திருவள்ளூர்:பல்வேறு துறைகளின் சார்பில், ஒருங்கிணைந்த அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழா, திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி தலைமையில் நடந்தது.விழாவில், மூவலுார் ராமமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ், பூந்தமல்லி, திருவள்ளூர், கடம்பத்துார், பூண்டி, திருவாலங்காடு ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த, 509 பேருக்கு தலா, 8 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.மேலும், 250 பேருக்கு உழைக்கும் மகளிருக்கான இருசக்கர வாகனங்கள்; 200 பேருக்கு விலையில்லா கோழி; 110 பேருக்கு விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் மூன்று மாற்றுத்திறனாளி களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் வங்கி கடன் மானியம் என, 872 பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டன.இதில், தமிழ் ஆட்சி மொழி கலை பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் சிறப்பு அழைப்பாளாராக பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில், திருவள்ளூர், எம்.பி.,வேணுகோபால், எம்.எல்.ஏ.க்கள் பலராமன், நரசிம்மன் ஆகியோர் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட சமூக நல அலுவலர் மீனா, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் குபேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X