ஆதார் கார்டுடன் வரும்படி உள்ளூர் பக்தர்களுக்கு அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆதார் கார்டுடன் வரும்படி உள்ளூர் பக்தர்களுக்கு அழைப்பு

Added : பிப் 12, 2019
Advertisement

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், மூலவரை தரிசிக்க, உள்ளூர் பக்தர்கள், ஆதார் கார்டுடன் வாருங்கள் என, நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். குறிப்பாக, பிரதி செவ்வாய்க்கிழமை முருகப் பெருமானுக்கு உகந்த நாள் என்பதால், வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பக்தர்கள் மலைக்கோவிலில் குவிவர்.இதில், உள்ளூர் பக்தர்கள் அதிகளவில் மலைக்கோவிலுக்கு வந்து மூலவரை தரிசிப்பதால், செவ்வாய்க்கிழமை மட்டும் உள்ளூர் பக்தர்கள் சிறப்பு வழியில் மூலவரை தரிசிப்பதற்கு, கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்தது.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, வெளியூர் பக்தர்கள் சிலர், 'லோக்கல்' என்று கூறி, சிறப்பு வழியில் சென்று, மூலவரை தரிசிக்கின்றனர்.இதை தடுக்கும் வகையில், உள்ளூர் பக்தர்களை அடையாளம் காணும் வகையில், பிரதி செவ்வாய்க்கிழமை, காலை, 6:00 - 9:00 மணி வரை, சிறப்பு வழியில் மூலவரை தரிசிப்பதற்கு, தங்கள் ஆதார் கார்டை, கோவில் ஊழியர்களிடம் காண்பித்து, மூலவரை தரிசிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பு பலகைகள் மலைக்கோவி லில், மாடவீதியில், பல இடங்களில் பக்தர்களுக்கு எளிதாக தெரியும் வகையில், வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X