நிறைவேறுமா?கடம்பத்தூர் ரயில்வே மேம்பால பணி.. ரயில்வே துறை அலட்சியத்தால் பாதிப்பு.. மணிக்கணக்கில் காத்திருக்கும் வாகனங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிறைவேறுமா?கடம்பத்தூர் ரயில்வே மேம்பால பணி.. ரயில்வே துறை அலட்சியத்தால் பாதிப்பு.. மணிக்கணக்கில் காத்திருக்கும் வாகனங்கள்

Added : பிப் 12, 2019
Advertisement

கடம்பத்துார்:ரயில்வே துறையின் அலட்சியத்தால், கடம்பத்துார் ரயில்வே மேம்பால பணி நிறைவடைவதில், காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால், ரயில் கடவுப்பாதையில், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள், தினமும் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் அவலம் நிலவுகிறது.திருவள்ளூர் -- பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, கடம்பத்துார் ரயில் நிலையம். இந்த ரயில் நிலைய கடவுப்பாதை வழியே, தினமும், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள், பேரம்பாக்கம், மப்பேடு வழியாக, காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுாருக்கு சென்று வருகின்றன.நெடுஞ்சாலை துறை, 'ஓகே'இந்த கடவுப்பாதை பூட்டப்படும் போது, வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதையடுத்து, பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று, கடம்பத்துார் ரயில் நிலையத்தில், 14.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மேம்பாலம் கட்டும் பணி, 2015, ஜூலை, 17ம் தேதி துவங்கியது.நெடுஞ்சாலை பகுதியில், 25 துாண்கள், ரயில்வே பகுதியில், நான்கு துாண்கள் என, மொத்தம், 29 துாண்களுடன், 700 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலத்தில் பணிகள் துவங்கின. பணி துவங்கியதால், மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சந்தோஷமடைந்தனர். ஆனால், அவர்களது சந்தோஷம், வெறும் கனவாகி விட்டது. காரணம், பணி துவங்கி, நான்கு ஆண்டுகளாகியும், நிறைவடையாமல் கிடப்பில் இருப்பது தான்.நெடுஞ்சாலை பகுதியில், பல்வேறு இடையூறுகளைக் கடந்து, 25 துாண்கள் அமைக்கும் பணி மட்டும் நிறைவு அடைந்து உள்ளது.ஆனால், ரயில்வே துறை சார்பில், ரயில் கடவுப்பாதையில் பாலம் அமைக்கும் பணி, இதுவரை துவங்கவில்லை.ரயில்வே மேம்பால பணிக்கு முட்டுக்கட்டை யாக, சாலையோரம் இருந்த 17 கட்டடங்களும், கடந்த ஆண்டு ஜூலையில் அகற்றப்பட்டன. இருப்பினும், பணியை விரைவுபடுத்தாமல், ரயில்வே துறையினர் அலட்சியமாக உள்ளனர்.இதனால், ரயில்வே கடவுப்பாதையின் இருபுறமும், தினமும், காலை, மாலை நேரங்களில், வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலம் நீடிக்கிறது.ஆம்புலன்ஸ் அவதிகுறிப்பாக, அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்து வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும், மணிக்கணக்கில் கடவுப்பாதை முன், காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது.அவசர நோயாளிகளுக்கு, ஒவ்வொரு வினாடியும், அவர்களின் உயிரைக் காப்பது முக்கியம் என்ற நிலையில், தினந்தோறும், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிதவித்து, நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்.எனவே, இனியாவது ரயில்வே துறையினர், அலட்சியப் போக்கை கைவிட்டு, மேம்பால பணியை விரைவுபடுத்த வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பணி தீவிரப்படுத்த அறிவுறுத்தப்படும்கடம்பத்துார் ரயில்வே கேட் தாமதத்திற்கு, கட்டட உரிமையாளர்கள் உரிய நேரத்தில் இடம் தராததே காரணம். பல இடையூறுகளைக் கடந்து, இடம் கையகப்படுத்தப்பட்டு விட்டது. விரைவில், ரயில் தண்டவாளங்களின் மேல், மேம்பால பணி துவங்க, ரயில்வே துறை அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்துவேன். ஆறு மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில், பணியை தீவிரப்படுத்தவும், அறிவுறுத்துகிறேன்.பி.வேணுகோபால், எம்.பி., திருவள்ளூர் தொகுதி.சுவாச கோளாறுகடம்பத்துார் ரயில்வே கேட் அமைக்கும் பணியில், நெடுஞ்சாலை துறையினர், 80 சதவீதம் பணியை முடித்துள்ளனர். பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் செல்ல, 'சர்வீஸ்' சாலை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், தார்ச்சாலை அமைக்கப்படாததால், சாலையில் வாகனங்கள் செல்லும் போது, துாசி பறந்து பாதசாரிகளையும், அருகில் உள்ள வீடுகளில் வசிப்போரையும் பாதிக்கிறது. இதனால் அவர்களுக்கு, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறு ஏற்படுவதாக, பொதுமக்கள் குற்றம் சுமத்தி உள்ளனர். எனவே, சர்வீஸ் சாலையை, தார் சாலையாக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X