காகிதம், சணல் கைப்பைகளை பயன்படுத்த வேண்டும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காகிதம், சணல் கைப்பைகளை பயன்படுத்த வேண்டும்

Added : பிப் 12, 2019
Advertisement

திருவள்ளூர் ஆட்சியர் அறிவுறுத்தல்
திருவள்ளூர்:'அனைத்து வகை பிளாஸ்டிக் கைப்பைகளையும் தவிர்த்து, காகிதம் மற்றும் சணல் பைகளை பயன்படுத்த வேண்டும்' என, திருவள்ளூர் ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக, திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி கூறியதாவது:பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை, ஜனவரி, 1ம் தேதி முதல் அமலுக்கு வந்து உள்ளது. 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்து உள்ளது.இதில், பாலிப்புரப்லீன் மற்றும் பாலிஎத்திலீனால் ஆன, பிளாஸ்டிக் பைகளும் அடங்கும். பாலிஎத்திலீனால் ஆன பிளாஸ்டிக் கைப்பைகளை, மக்கள் பரவலாக பயன்படுத்தி வந்ததால், அதன் இயல்புகளை நன்கு அறிந்தனர்.அதே சமயத்தில், பாலிப்புரப்லீன் பைகளின் அமைப்பு, வண்ணம் என, இயல்பில் துணிப்பைகள் போலவே இருப்பதால், அவை துணிப்பைகள் என, தவறாக புரிந்து கொண்டுள்ளனர். இவையும் பாலிப்புரப்லீன் என, உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வகையான கைப்பைகளை மருந்தகம், உணவகம், துணி கடைகளில் துணிப்பைகள் என, தவறாக கருதி பயன்படுத்தப்படுகிறது.இது போன்ற பிளாஸ்டிக் மற்றும் நெய்யப்படாத கைப்பைகளை தவிர்த்து பாரம்பரிய சணல், துணி மற்றும் காகித பைகளை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X