காலாவதியான மருந்துகளால் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காலாவதியான மருந்துகளால்

Added : பிப் 12, 2019
Advertisement

பொன்னேரி:தனியார் கிடங்கில் கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான காலாவதியான பயிர் மருந்துகள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா என்ற சந்தேகத்தில் விவசாயிகள் அவற்றை வாங்கி பயன்படுத்துவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.மீஞ்சூர் அடுத்த, நாலுார், ஏரிக்கரை அருகே உள்ள தனியார் கிடங்கு ஒன்றியில், பல கோடி ரூபாய் மதிப்பிலான காலாவதியான பயிர் மருந்துகள் குவிக்கப்பட்டிருந்தன.காலாவாதியான நிலையில், மறு விற்பனைக்காக, 'ரீபேக்கிங்' செய்து வெளியிடங்களுக்கு அனுப்புவதற்காக வைக்கபட்டிருந்தவையை வருவாய் துறையினர் கைப்பற்றினர். கிடங்கில் உள்ள மொத்த மருந்துகளையும் ஆய்வு செய்து கணக்கெடுக்க வேண்டுமானால், ஒரு மாதம் காலமும், குறைந்தது, 100 அலுவலர்களும் தேவைப்படும் நிலை ஏற்பட்டதால், அப்பணிகள் ஒரே நாளில் நிறுத்தப்பட்டன.சிலவற்றை ஆய்வு செய்து, அதன் அறிக்கை மூலம், மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்நிலையில், காலாவதியான மருந்தினங்கள் தனியார் உரக்கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா? என்ற சந்தேகம் விவசாயிகள் இடையே ஏற்பட்டு உள்ளது.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:தற்போது கைப்பற்றப்பட்ட மருந்தினங்ள் விவசாயிகள் பல்வேறு தருணங்களில் விவசாயத்திற்கு வாங்கி பயன்படுத்தக்கூடியவை. தற்போது, கடைகளில் உள்ளவை தரமானதா? அல்லது போலியானவையா என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X