செய்தி சில வரிகளில்...| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : பிப் 12, 2019
Advertisement

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மனுதிருத்தணி: திருத்தணி ஒன்றியம், அகூர் நத்தம் கிராமத்தில், அரசுக்கு சொந்தமான, ஐந்து ஏக்கர் கிராம நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த நான்கு நபர்கள், ஆக்கிரமித்து தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர்.இந்நிலையில், நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், நேற்று, ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.அந்த மனுவில், தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு, ஊராட்சிக்கு தேவையான கட்டடம், விளையாட்டு திடல் அல்லது வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.ஆட்சியர் மனுவை பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.மருத்துவமனையில் இயற்கை மருத்துவ பிரிவுதிருத்தணி: திருத்தணி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில், சித்த மருத்துவமனை ஏற்கனவே திறந்து நோயாளிகளுக்கு சிகிச்சை, ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.இந்நிலையில் நேற்று முதல், திருத்தணி அரசு மருத்துவமனையில் இயற்கை மற்றும் யோகா மருத்துவ பிரிவு புதியதாக துவக்கப்பட்டது. இந்த பிரிவின் மருத்துவராக மோனிகா விஜயகுமார்நியமிக்கப்பட்டு பணியில் சேர்ந்துள்ளார்.இது குறித்து மருத்துவர் மோனிகா கூறியதாவது:தமிழகம் முழுவதும், 72 அரசு மருத்துவமனைகளில் இப்பிரிவு துவக்கப்பட்டுள்ளது. திருத்தணி அரசு மருத்துவமனையில் புதியதாக துவக்கப்பட்டுள்ளது. தற்போது, யோகா, அக்குபச்சர், உணவு உண்ணும் முறைகள், வாழைஇலை குளியல், மண், நீர் சிகிச்சை மற்றும் பஞ்சபூதங்கள் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.திருத்தணி கோவில் தொலைபேசி சீரமைப்புதிருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில் உள்ள கோவில் அலுவலகத்தில் உள்ள தொலைபேசி, (044-27885243) ஒரு மாதத்திற்கு மேலாக பழுதாகி இருந்தது. இதனால், வெளியூர் பக்தர்கள் கோவிலில் நடைபெறும் பூஜைகள் மற்றும் சேவைகள் குறித்து அறிந்துக் கொள்ள முடியாமல் தவித்தனர்.இது குறித்தான செய்தி வெளியானதையடுத்து, தொலைபேசி அலுவலர்கள் மலைக்கோவிலுக்கு சென்று, கோவில் ஊழியர்கள் ஒத்துழைப்புடன் பழுதடைந்த தொலைபேசியை சீரமைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X