தொழில் பூங்கா கேட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் பூங்கா கேட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Added : பிப் 12, 2019
Advertisement

திருவள்ளூர்:தொழில் பூங்கா (ஆட்டோ நகர்) அமைக்க வேண்டும் என, மோட்டார் வாகன பழுது பார்ப்போர் சங்கத்தினர் நேற்று, ஆட்சியர் அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.செங்குன்றம் புறவழிச்சாலை பகுதியில், 100க்கும் மேற்பட்டோர், 40 ஆண்டுகளாக மோட்டார் கனரக வாகனங்கள் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகின்றனர்.இந்நிலையில், 2000ம் ஆண்டு, தங்க நாற்கர சாலை விரிவாக்க பணிக்காக, அங்கிருந்த மோட்டார் பழுது பார்க்கும் பணிமனைகள் முழுவதும் அகற்றப்பட்டன.இதையடுத்து, செங்குன்றம் மோட்டார் வாகன பழுது பார்ப்போர் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனையாளர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின் கோரிக்கை மனு ஆட்சியரிடம் கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:தங்க நாற்கர சாலை விரிவாக்க பணிகளுக்காக, எங்கள் பணிமனையை அகற்றியதால், தற்போது, சாலையோரம், ஆபத்தான நிலையில் வாகனங்கள் பழுது பார்த்து வருகிறோம். தொடர்ந்து, ஆட்சியரிடம் மாற்று இடம் கோரி விண்ணப்பித்த போது, திருவள்ளூர் தாசில்தார் எங்கள் வசதிக்கேற்றவாறு, காரணி கிராமத்தில், 40 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து, எளாபுரம் ஒன்றிய ஆணையருக்கு பரிந்துரை செய்துள்ளார்.எனவே, எங்களது நியமான கோரிக்கைகளை ஏற்று, தாசில்தார் தேர்வு செய்த இடத்தில், கனரக வாகன பழுது பார்க்கும் தொழில் பூங்கா (ஆட்டோ நகர்) அமைத்து தர வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X