மாணவர்கள் போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் போராட்டம்

Added : பிப் 12, 2019
Advertisement

காரைக்குடி:புதுவயல் தனியார் பள்ளியில் மாணவர் ஒருவரை ஆசிரியர் அடித்ததாக மற்ற மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப்பள்ளி 10ம் வகுப்பு மாணவர் சரவணன். பிப்.,7 அன்று சிறப்பு வகுப்புக்கு இவர் வரவில்லை என ஆசிரியர் ஒருவர் அடித்ததாக புகார் எழுந்தது. மாணவரின் உயிர் நாடியில் பட்டதால் வலியால் அவரை மருத்துவமனைக்கு ஆசிரியர் அழைத்து சென்றார்.தற்போது மாணவர் சிவகங்கை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியரை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பிப்.,9ல் 10ம் வகுப்பு மாணவர்கள் சிலர் வகுப்பை புறக்கணித்தனர்.நேற்று 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் களஞ்சியம் பேச்சு நடத்தியதை தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு பிறகு வகுப்புக்கு சென்றனர்.தலைமை ஆசிரியர் முத்துவேல் கூறுகையில், ''அடித்தது தவறு தான். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி செயலர் வந்த பிறகு அவரிடம் கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X